search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோன்டா ஜாஸ் இ.வி."

    ஹோன்டா நிறுவனத்தின் ஹாஸ் இ.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Honda #Jazz



    ஹோன்டா ஃபிட் இ.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. ஃபிட் இ.வி. கார் ஹோன்டா ஜாஸ் பேட்ஜ் கொண்டிருக்கிறது. டெல்லியில் புதிய ஜாஸ் இ.வி. கார் சோதனை செய்யப்படுவதாக நியூஸ்18 வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் ஃபிட் ஹேட்ச்பேக் இரண்டாம் தலைமுறை மாடலை தழுவி ஃபிட் இ.வி. உருவாகியிருக்கிறது. ஃபிட் இ.வி. கார் மாடல் தான் இந்தியாவில் ஜாஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஹோன்டா ஃபிட் இ.வி. காரின் முன்பக்கம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 15 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் வித்தியாசமான ஸ்பாயிலர் காரின் பின்புற கிளாஸ் வரை நீள்கிறது. ஹோன்டா ஃபிட் இ.வி. மாடலில் MCF3 எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 331-வோல்ட், 20கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: News18

    எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்யும் போது 225 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஃபிட் இ.வி. மாடலில் வழக்கமான சார்ஜிங் போர்ட் வலதுபுறமாகவும், ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வதற்கான போர்ட் இடதுபுறத்தில் வழங்கப்படுகிறது.

    வழக்கமான சார்ஜிங் போர்ட் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்தும் போது பேட்டரியை 20 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடும். இந்தியாவில் வெளியிட முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் காரை ஹோன்டா உருவாக்கி வருகிறது.

    எனினும், இந்த கார் பி-பிரிவில் வெளியாகும் என்றும் இது ஜாஸ் மாடலை சார்ந்திருக்காது என கூறப்படுகிறது. இதேபோன்று 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய விலை குறைந்த எலெக்ட்ரிக் வாகனத்தை ஹோன்டா உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ×